ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் வெடி விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

76

 

ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் (05.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய பழனி வடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசாரணை
குறித்த நபர் தேன் எடுப்பதற்காக காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் காட்டிற்குள் இருந்த சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியதையடுத்து வளர்ப்பு நாயான தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அவரது வீட்டுக்கு சென்று அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE