விமான நிலையத்திற்குள் நிர்வணமாக சென்ற நபரால் ஏற்பட்ட பரபரப்பு!

87

 

அமெரிக்கா – புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த நபர், நிர்வாணமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம் சுளித்ததுடன், அவரை விட்டு விலகிச் சென்றனர்.விமான நிலைய முதலாவது முனையத்தின் செக்-இன் பாதை வழியாக சர்வ சாதாரணமாக நடந்து சென்ற அவர், பின்னர் விமான நிலைய டி.எஸ்.ஏ. பாதுகாப்பு பாதை நோக்கி நடந்து சென்றார்.

பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்று, தடை செய்யப்பட்ட அறைக்குள் நுழைய முயன்றுள்ளார். பின்னர் பொலிஸார் அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்து, துணியால் போர்த்தி அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அந்த நபர் மார்ட்டின் எவ்டிமோவ் (வயது 36) என்பதும், மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. ஆனால் எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது தெரியவில்லை.

அந்த நபர் நிர்வாணமாக வலம் வரும் காணொளி வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

SHARE