இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து போராட்டம்

118
பாறுக் ஷிஹான்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ்  மக்களின் போராட்டம் மற்றும்  துஆ பிராத்தனை  இன்று   கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கத்திற்கு ஊர்வலமாக சென்று நிறைவடைந்தது.
பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் இன்றுடன் பல நாட்களாக இடம் பெற்று வருகின்ற நிலையில்  யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள்  மக்கள் உயிரிழந்துள்ளனர் .
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில்  ஒன்று கூடிய பொது மக்கள்  பல்வேறு சுலோகங்களை ஏந்தி துஆ பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
SHARE