கனடா அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணம்

113

 

கனடாவில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கனடாவின் மொனிற்றோபாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண்களும் மூன்று சிறுவர்களும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

மொனிற்றோபாவின் கார்மனின் அதிவேக நெடுஞ்சாலை வாகனமொன்று எரியுண்ட நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தில் உள்ளிருந்தும் வாகனத்திற்கு அருகாமையில் இருந்தும் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைவர்களின் வீட்டிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

SHARE