இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி முதல் தாக்குதலை தெடுத்து வருகின்றது.
இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 250 பேர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்த நிலையில் பணயகைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ரபா நகரில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 50 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக தெற்கு காசா நகரமான ரபாவில் உள்ள மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.