கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்த குடும்பஸ்தர் கைது

111

 

வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் குறித்த குடும்பஸ்தர், அண்மைக்காலமாக பல கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக அவருடைய மனைவி பலமுறை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, சந்தேகநபர், குடும்பஸ்தர் ஒருவரின் கண்ணை கைவிரலால் குத்தி காயப்படுத்திய நிலையில் அவரை மருதங்கேணி பொலிஸார் தேடிவந்துள்ளனர்.

மனைவி முறைப்பாடு
அதேவேளை, அவரது வீட்டில் மனைவியை தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில், அவரது மனைவி வேறு ஒரு இடத்தில் உயிர்பாதுகாப்புக்காக தஞ்சம் கோரியுள்ளார்.

இந்நிலையில், தன்னையும் பிள்ளைகளையும் தாக்கியதாக மனைவி அளித்த முறைப்பாட்டிற்கமைய மருதங்கேணி பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் கோரிக்கை

தனது கணவன் மீது பல்வேறு முறைப்பாடுகள் உள்ளதால் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் உயிர்பாதுகாப்பு தேவை என மருதங்கேணி பொலிஸாரிடம் சந்தேகநபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணவனை நீதிமன்றில் முற்படுத்துவதோடு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மனநல காப்பகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE