குஷ்பு பேசாமல் இருந்தாலும் அவரை சுற்றி எப்போதும் ஒரு வகை சர்ச்சை இருந்தே கொண்டே தான் இருக்கும். முன்பெல்லாம் அவர் தான் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் பேசி சர்ச்சையை உண்டாக்குவார்.
தற்போது குஷ்புவின் மகளும் ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவிடம் ரசிகர் ஒருவர் ‘உங்கள் வயது என்ன, எப்போது சினிமாவிற்கு நடிக்க வருவீர்கள்’ என கேட்டுள்ளார்.
இதற்கு அவர் ‘நான் ஏன் சினிமாவில் நடிக்க வரவேண்டும், எனக்கு அதில் துளிகூட விருப்பம் இல்லை, என் அம்மாவை போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் இல்லை, நான் கதை எழுத வேண்டும், கதை என்றால் நாவல் இல்லை, சிறுகதை தான் எழுத விருப்பம்’ என கோபமாக பதில் கூறியுள்ளார்.