பரந்தன் ஏ 35 வீதியில் பேருந்து விபத்து: ஒருவர் காயம்

82

 

பரந்தன் ஏ 35 வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது இன்று (16-02-2024) காலை இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஏ 35 வீதியின் புளியம் பொக்கணை பகுதியில் இருந்து கன்னிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதியுள்ளது.

பொலிஸ் விசாரணை
இதன்போது 02 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு மாடுகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்துடன் மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கட்டாக்காளி கால்நடைகள் தொடர்ந்தும் வீதிகளில் இரவு வேளைகளில் நடமாடுவதனால் அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் ஏ 35 வீதி, ஏ-09 வீதி ஆகியவற்றில் தொடர்ச்சியாக இவ்வாறான கால்நடைகளினால் விபத்துக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE