போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
300 பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.