விபத்தா? கொலையா? பொலிஸார் விசாரணை

170

 

தெஹிவளையில் கார் ஒன்று ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று(21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்கூட்டரில் பயணித்தவரே மரணித்தார்.52 வயதான இவர் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

தெஹிவளை கடவத்தை வீதியின் பெரகும்பா மாவத்தையை நோக்கி செல்லும் சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து திட்டமிட்ட கொலையா? என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், சந்தேகத்திற்கிடமான காரின் சாரதிக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதா? என்பது தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், விசாரணைகளை மேற்கொண்ட தெஹிவளை பொலிஸார் தற்போது சந்தேகத்திற்குரிய காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (22) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE