விபத்தில் பெண் ஒருவர் பலி: கணவர் பொலிஸாரால் கைது

105

 

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவல்கலை பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிரிவல்கலை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த பெண் தனது கணவருடன் தென்னை மரக்கிளைகளால் அமைக்கப்பட்ட சிறிய வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், வீடு தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
வீடு தீப்பற்றி எரிந்த போது கணவர் வேகமாக வெளியே குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE