சூரியவெவ பிரதேசத்தில் சந்தேக நபருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூரியாவ கெலின்கந்த காட்டில் சந்தேக நபர் ஒருவர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூடு
அங்கு சந்தேக நபருக்கும் அதிரடிபடையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக உறுப்பினர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது