இலங்கைக்கு எதிரான தொடரில் வங்கதேச அணியில் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்: தலைமை பயிற்சியாளர் முன்னாள் இலங்கை வீரர்

149

 

வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக டேவிட் ஹெல்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியாளர்கள்
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் மார்ச் 4ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு இரண்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெர்முடா அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஹெம்ப் (David Hemp) 2 ஆண்டுகளுக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்படுவார் என வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல், நியூசிலாந்தின் முன்னாள் ஆல்-ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ஆடம்ஸ் (Andre Adams) பந்துவீச்சு பயிற்சியாளராக அணியில் இணைவார் என்றும் BCB கூறியுள்ளது.

தலைமை பயிற்சியாளர்
இவர்கள் இருவரும் இலங்கைக்கு எதிரான தொடரில் தங்கள் பணியை தொடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சந்திக ஹதுசிங்க (Chandika Hathurusinghe) வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE