முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உலர் உணவுப் பொதிகள் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் நிதி பங்களிப்பில் இன்றையதினம் (01.03.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கட்சியின் உறுப்பினர்கள்
அதேவேளை, நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், ஏயிரிழை அமைப்பின் தலைவர் கு.கோணேசன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.