திருகோணமலை – டொக்யார்ட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம்

98

 

டொக்யார்ட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலமொன்று இன்று (01) மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நீண்ட நேரம் கடலில் மிதந்துகொண்டிருந்ததை அவதானித்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொலிஸ் உயிர் காக்கும் பிரிவினர் கடலுக்குள் சென்று சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்
உயிரிழந்தவர் தொடர்பாக இதுவரை எதுவித தகவல்களும் தெரியவரவில்லை. அதன் காரணமாக இதுவரை சடலத்தை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இனங்காணப்படாத நிலையில் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமான ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சடலத்தை இனம் காண்பதறகான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE