கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி

122

 

கரந்தெனிய பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருபாபில பிரதேசத்தில் இன்று அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவன் குமார என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவி தனது கணவரின் கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கியதாகவும், தாக்குதலுக்குள்ளானவர் வீட்டில் இருந்து வெளியே வந்த வீட்டருகே இறந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியுடன் மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கும் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE