நாவலடி பிரதேசத்தில் மகளை பார்த்துவிட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த சோகம்

111

 

கொழும்பு பிரதான வீதியில் நாவலடி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலும் அவருடன் பயணம் செய்த கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரியில் கல்வி கற்கும் தனது மகளைப் பார்வையிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் கொழும்பு பிரதான வீதியில் நாவலடியில் வைத்து மோட்டார் சைக்கிலுக்கு குறுக்கே நாய் பாய்ந்தமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பப்பெண்
இந்த விபத்தில் 53 வயதுடைய அப்துல் ஹமீத் ஜமீலா என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.

மேலும் உயிரிழந்த நபரின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHARE