பல்கலைக்கழக மாணவர்களினால் சாந்தனுக்கு அஞ்சலி

77

 

ராஜிவ்காந்தில் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு தாயகம் செல்ல காத்திருந்து திடீரென மரணம் அடைந்த சாந்தனுக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக பொங்கு தமிழ் தூவி முன்றில் நேற்று (04.03.2024) மாலை 06 மணியளவில் அளவில் இடம்பெற்றுள்ளது.

நினைவு அஞ்சலி
இதன்போது மாணவர்களால் ஒளி சுடர் ஏற்றப்பட்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE