உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிப்பதன் மூலம் எந்தவொரு பயனும் இல்லாத காரணத்தினால் நீதிபதி சரவணராஜாவை தொடர்ந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முக்கிய பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு பொறுப்பில் இருந்த முக்கிய பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக, பாதாள குழுக்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸ் நாட்டுக்கு தப்பியோடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
பாதாள குழுக்களின் அச்சுறுத்தல்
பாதாள குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், அவரின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள ஒரு துப்பாக்கியினால் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜே.வி.பி எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்குமானால் முதலில் கைது செய்யப்படுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எனவும் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.