ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும்-சம்பிக்க ரணவக்க

98

 

நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தை அதிகரித்தல்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரச வருமானத்தை அதிகரித்தல் தொடர்பில் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டால் யோசனைகளை நடைமுறைப்படுத்திக் காண்பிக்க முடியும்.

செலவுகள் மற்றும் வருமானமீட்டல் என்பனவற்றை டிஜிட்டல் முறையின் ஊடாக மேற்கொள்வதன் மூலம் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பதிவாகும்.

டிஜிட்டல் முறை
வரி செலுத்த வேண்டிய நபர்களை சரியான முறையில் அடையாளம் காண வேண்டும்.

வரி அறவீட்டு முறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE