விருந்தினர் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்திய நபர் கைது

102

 

ஆடம்பர கப்பல் ஒன்றின் விருந்தினர் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்திய பணியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தின் மியாமி நகரை மையாகக் கொண்டு இயங்கி வரும் ஆடம்பர பயணிகள் கப்பல் சேவை நிறுவனத்தின் கப்பல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண்கள் உடை மாற்றுவதனை கணொளியாக பதிவு செய்யும் நோக்கில் இந்த பணியாளர் இரகசிய கமராவை பொருத்தியுள்ளார்.

34 வயதான ஏர்வின் ஜோசப் மிராசொல் என்ற பணியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவரும் அவரது இரண்டு மகள்களும் தங்கியிருந்த அறையின் கழிப்பறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்த பெண் அறிவித்ததனைத் தொடர்ந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மிராசொல் அறை பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

SHARE