பெண் கொடூரமாக கொலை : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

105

 

26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட 26 வயதுடைய பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் அனுராதபுரம், பமுகொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் சீதுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தங்கும் அறையில் கண்ணாடி துண்டு மூலம் கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த அறையில் தூக்கிடும் வகையில் கயிறு கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்காணித்தனர்.

இதன்படி சந்தேகநபர் கொலையை செய்துவிட்டு உயிரை மாய்க்க திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். .

சந்தேக நபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையிலான தகாத உறவின் போது, ​​குறித்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு சந்தேக நபர் பல தடவைகள் சென்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொலையின் பின்னர் தப்பியோடிய சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவம் தொடர்பில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE