தொல்புரம் கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் நேற்று(17.03.2024) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது வட்டுக்கோட்டை -தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.