சங்கானை பகுதியில் இயங்கிய உணவுகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

118

 

சங்கானை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கும் எதிரான மல்லாகம் நீதிமன்றில் இன்று (21.03.2024) வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

174,000 ரூபா அபராதம்
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக சங்கானை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், வட்டுக்கோட்டை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 14 உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேற்படி, 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் 174,000 ரூபா அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

SHARE