தம்பி படத்தில் பல புரட்சி கருத்துக்களை பேசியவர் மாதவன். ஆனால், நிஜ வாழ்வில் அதெல்லாம் சினிமா தான் என்று நிரூபித்து விட்டார் போல. மாதவன் மீது திண்டுக்கல்லை சார்ந்த விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர்.
என்ன என்று விசாரித்தால், ஒரு சில அதிகாரிகளுடன் நடிகர் மாதவன் சேர்ந்து கொண்டு தங்கள் பகுதிகளின் பாசன வாய்க்காலை அழித்ததோடு, நடைபாதை, புறம்போக்கு நிலங்களையும் நடிகர் மாதவன் ஆக்கிரமித்து விட்டாராம்.
இதனால், நடிகர் மாதவன் மீதும், இதற்கு துணை போகும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.