ஈழத்து மாணவர்களுக்கு உதவிய விஷால்

372

விஷால் நாளுக்கு நாள் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இனி பிறந்தநாள் அன்று பார்ட்டி என்று இல்லாமல், பல ஏழைகளுக்கு உதவப்போகிறேன் என்று கூறி வருகிறார்.

இன்று பிறந்தநாள் கானும் இவர் சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் நிறுவனமான ஈழ ஏதிலியார் மறுவாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் மற்றும் காலுறைகள் வழங்கினார்.

மழலையர் பள்ளி குழந்தைகள் மறுவாழ்வு மையங்களை தொடர்ந்து நடத்துவதற்கான ஒரு மாத செலவிற்கான பணம் 1,65,000 ரூபாயும் கொடுத்துள்ளார். இதுபோல் என்றும் விஷால் பல நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று சினி உலகம் சார்பாக விஷால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

SHARE