தனியார் கல்வி நிலையத்தில் கடும் மோதல் – பலர் காயம்

109

 

இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மாணவியும் மூன்று மாணவர்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மோதல்
04 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பொல்கொல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பாகமுவ, பக்மீகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர சித்தி பெறாத மாணவர்கள் கல்வியைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE