ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய கமல் ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா! புகைப்படத்தை பாருங்க

150

 

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டவர் தான் நடிகை சரிகா. இவர் கமலின் இரண்டாம் மனைவி ஆவார்.

ஏற்கனவே நடிகை வாணி கணபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கமல், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமல் ஹாசன் – சரிகா தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்பதை நாம் அறிவோம். இவர்கள் இருவருமே தங்களுடைய தாய், தந்தையை போல் திரையுலகில் பயணித்து வருகிறார்கள். சரிகாவை கடந்த 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் கமல்.

சரிகாவா லேட்டஸ்ட் புகைப்படம்
இதன்பின் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், ஸ்ருதி ஹாசன் தனது தாய்யுடன் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது தாய் சரிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

SHARE