சமந்தாவுடன் விவாகரத்து.. புது காதலி உடன் சுற்றும் நாக சைதன்யா? போட்டோ வைரல்

187

 

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். நாக சைதன்யா அதன் பின் பிரபல நடிகை சோபிதா துளிபாலாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு பரவ தொடங்கியது. அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

புது காதலி உடன்..
இந்நிலையில் இன்ஸ்டாக்ராமில் சோபிதா காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதே போல நாக சைதன்யாவும் காட்டில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ஒன்றாக தான் ட்ரிப் சென்றிருக்கிறார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர்கள் காதல் உறுதியாகி இருப்பதாகவும் மீண்டும் இணையத்தில் கிசுகிசு வர தொடங்கி இருக்கிறது.

SHARE