கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு !

139
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது  வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.கண்டி மனிதாபிமான அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக், கண்டி மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதிகளான திருமதி ராஷிதா, எம் என் எம் நௌஷாத், பொதுச் சுகாதார தாதிய சகோதரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் , மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ  மாது ,பொதுச் சுகாதார மருத்துவ மாது க்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கண்டி மனிதாபிமான அமைப்பின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 25 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான பிரசவ பொதிகள் (Maternity kits அடங்கிய பொதிகள்) கையளித்து வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு தேவையான ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE