தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம்

112

 

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் எந்தவிதத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது தனிப்பட்ட பாதுகாப்புக்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரிமிருந்து அனுமதிப்பத்திரத்துடன் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து துப்பாக்கிகளையும் ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னதாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தம்வசம் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது.

எனினும், போர் இடம்பெற்ற காலத்தின் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE