மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் எட்டு இந்திய மீனவர்கள் கைது

102

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் இன்று மாலை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே குறித்த எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

SHARE