ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் மேலும் வளர்ச்சியடையவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பில் ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான பிரதி ஆலோசகர் அரவிந் குப்தா இதனை தெரிவித்துள்ளார். என்றும் அதிகரித்து வந்துள்ள இரு நாடுகள் மத்தியிலான உறவுகள் இன்று மேலும் சிறப்பான நிலையில் உள்ளன,பிராந்திய அபிவிருத்தி இடம்பெற்று வருவதால் இலங்கை அதன் முக்கிய நாடாக காணப்படுகின்றது. பயங்கரவாதம் இன்றும் சவாலான விடயமாக காணப்படுகின்றது,இளைஞர்கள்இணையவெளிகள் மூலமாக தீவிரவாதத்தை நோக்கி அதிகளவிற்கு ஈர்க்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்