விஜய்யுடன் நடிக்க முடியாது- பிரபல நடிகரின் அதிர்ச்சி பதில்

358

தமிழ் சினிமாவில் அனைவரும் விஜய்யுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படியிருக்க சமீபத்தில் ஒரு நடிகர் விஜய்யுடன் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை, தனி ஒருவன் படத்தின் மூலம் மிரட்டி ரசிகர்களை கவர்ந்த அரவிந்த் சாமி தான். இவர் டுவிட்டரில் ரசிகர்களிடம் பேசுகையில் ‘நல்ல கதை கிடைத்தால் விஜய், அஜித் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன்’ என முதலில் கூறினார்.

பின் விஜய் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் விஜய்க்கு அண்ணன் அல்லது வில்லன் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா’ என கேட்டார். அதற்கு அவர் ‘இரண்டுமே இல்லை’ என்று பதில் அனுப்பியுள்ளார். இவர் ஏன் இப்படி சொன்னார் என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், அந்த ரசிகர் அந்த கேள்வியை தன் பக்கத்திலிருந்து உடனே நீக்கி விட்டார்.

SHARE