வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

343

வடக்கினில் மட்டும் 42 ஆயிரம் பேர் வரையினில் விசேட தேவையுடையவர்களாக உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் பொ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையினில் அண்மையினில் இவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வழங்க கூட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கூடிய அளவினில் யுத்த பாதிப்புக்களினாலேயே விசேட தேவையுடையோரது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணசபைக்கு வாக்களித்த அனைவருமே மக்களிற்கு எதனையும் செய்யமுடியுமென எதிர்பார்த்தே வாக்களித்திருந்தனர்.ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்களினை நிறைவு செய்யமுடியவில்லையெனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE