தேசிய அரசாங்கத்தில் மேலும் மூன்று அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
விஜித் விஜயமுனி சொய்சா, பைசர் முஸ்தபா மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
விஜித் விஜயமுனி சொய்சா – வடிகாலமைப்பு மற்றும் நீர் முகாமைத்துவம்
பைசர் முஸ்தபா – உள்ளுராட்சி மன்றம் மற்றும் மாகாணசபைகள்
மலிக் சமரவிக்ரம – சர்வதேச வர்கத்தகம் மற்றும் அபிவிருத்தி தந்திரோபாயம்
இதன்படி தற்போது அமைச்சரவை அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவை அமைச்சர்களாக 42 அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது