இந்தியாவின் சென்னையில் இருந்து சொக்லட் இனிப்பு பண்டத்திற்குள் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து வந்த இலங்கை பெண்ணொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் 200 கிராம் ஹெரோயினை சொக்லட் இனிப்பு பண்டத்தில் மறைத்து எடுத்துச் வந்துள்ளார். விமான நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 58 வயதான பெண் எனவும் தெரியவந்துள்ளது.