ரஜினி கோச்சடையான், லிங்கா என தொடர் தோல்விகளால் கொஞ்சம் தடுமாறியுள்ளார். ஆனால், தற்போது கபாலி, எந்திரன்-2 என மீண்டும் புது உற்சாகத்துடன் களம் இறங்கியுள்ளார்.
சமீபத்தில் வந்த தகவலின் படி பிரபல கன்னட தயாரிப்பாளர் அசோன் கெனி திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறை ரஜினியை வைத்து எடுக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.
இதுக்குறித்து 2 வருடத்திற்கு முன்பே இவர் ரஜினியிடம் பேசிய போது, அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம். தற்போது மீண்டும் இப்படம் தொடங்குவது குறித்து ரஜினியிடம் பேசி அதிகாரப்பூர்வ அறிவிப்பை தான் வெளியிடுவதாக அசோக் கெனி கூறியுள்ளார்.