படுகொலைக்கு நீதிகோரி கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம்

294

 

படுகொலைக்கு நீதிகோரி  கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபயணம் ஆரம்பம்
sritharan_strike_003

கடந்த 2009ல் இலங்கை படைத்தரப்பால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதிகோரி ஐ.நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீத்துப்போகச் செய்யும் நடவடிகை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் தற்பொழுதைய மேற்குலக மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் உள்ளக விசாரணை நிராகரித்து நம்பிக்கை தரக்கூடிய சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும்படி சர்வதேசத்திடம் கோரி இன்று கிளிநொச்சியில் இருந்து நடைபவனி யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து இந்த நடைபவனி மரணித்தவர்களுக்கு சுடடேற்றி வணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பித்து தற்பொழுது யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மகாண சபை உறுப்பினர் அனந்திசசிதரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மனிதாபிமானிகள் கலந்துகொண்டுள்ளனர்.

SHARE