வடமாகாணசபை அங்கீகரிக்காமல் மாகாணசபையின் சார்பில் உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பில் பங்கெடுக்க முடியாது. என தெரிவித்திருக்கும் வடமாக ணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் பங்கெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள் குழு பங்கேற்குமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.