இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா வாழ்க்கையை கணேசன் என்பவர் போர்க்களத்தில் ஒரு பூ என்று படமாக இயக்கியுள்ளார். இப்படம் சென்ஸார் சென்ற போது எஸ்.வி.சேகர் தரக்குறைவாக கேள்வி கேட்டதாக அவர் கூறியுள்ளார்.
இப்படத்தில் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள், அதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? என கேட்டாராம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எஸ்.வி. சேகர், இசைப்பிரியா கற்பழிப்பட்டாரா? என்று கேட்கிறார், அதற்கு ஆதாரம் உள்ளதா என்றும் கேட்கிறார்? அவர் என்ன படுக்கையறை வீடியோவை காட்டச்சொல்கிறாரா? என்று எனக்கு தெரியவில்லை’ என்று கோபமாக பேசியுள்ளார்.
இப்படத்திற்கு சென்ஸாரில் அனுமதி மறுக்க, தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர கணேசன் முடிவெடுத்துள்ளாராம்.