நல்லெண்ண அடிப்படையில் இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்ல உள்ள நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்ல உள்ளார்.இந்தியாவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.