ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாக சிறுபான்மை கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் விலகிக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் பல கட்சிகள் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிளைத் தவிர சில இளைஞர் அமைப்புக்கள் மற்றும் வேறும் அமைப்புக்களும் கூட்டணியில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஹக்கீம் மற்றும் பதியூதீனின் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுமா என்பது உறுதியாக கூற முடியாது என்ற போதிலும் பல கட்சிகள் இணைந்து கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.