கலப்புநீதிமன்றமே சிறந்ததுஎன்ற ஐ.நாவின் பரிந்துரைக்கு உறுப்புநாடுகள் தங்கள்வலுவான ஆதரவை வழங்கவேண்டும்

349

இலங்கையின் உள்நாட்டுபோரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்குவதற்கு கலப்பு நீதிமன்றமே சிறந்தது என்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தங்கள் வலுவான ஆதரவை வழங்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவா இயக்குநர் ஜோன் பிசர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவேண்டும். இந்த முக்கியமான முயற்சியை ஆரத்தழுவவேண்டும்.

கலப்பு நீதிமன்றத்தை அமைக்;க வேண்டும் என்ற ஆணையாளரின் வேண்டுகோள் முக்கியமான ஓரு நடவடிக்கை. எனினும் இது நீதிக்கான நடவடிக்கையின் ஆரம்பமே.

குறிப்பிட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதிலும்,நீதி நிலைநாட்டப்படும் வரை  அதனை கண்காணிப்பதிலுமே மனித உரிமை பேரவையினதும் அதன் உறுப்பு நாடுகளினதும் நம்பகத்தன்மை தங்கியுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

SHARE