தூங்கும் முன் காபி அருந்துபவரா நீங்கள்? காத்திருக்கும் பேராபத்து

749

உடலுக்கு உற்சாகம் தரக்கூடிய காபி மற்றும் செயற்கையான உற்சாக பானங்களை மாலை நேரங்களிலேயே அதிகமானவர்கள் விரும்பி அருந்துவார்கள்.

இவற்றில் இயற்கை பானமான காபியில் காணப்படும் காபைன்(caffeine) எனப்படும் பதார்த்தமே உடலுக்கு உற்சாகத்தை தருகின்றது.

தூக்கத்திற்கு செல்லும் முன் 3 மணித்தியாலங்களுக்குள் காபி அருந்துவதனால் வழமையான தூக்கம் 40 நிமிடங்களால் பிற்போடப்பட்டு 24 மணி நேரத்திற்குரிய உயிரியல் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படுகின்றது என புதிய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Laboratory of Molecular Biology அமைப்பு மேற்கொண்டுள்ளது.

SHARE