வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியினால் வவுனியா தோணிக்கல் நாகதம்பிரான் ஆலய வீதி புணரமைப்பு செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன இருப்பினும் வீதி புணரமைப்பினை முன்னெடுத்து செல்வதற்கு மின்சார கம்பங்களும் தொலைத்தொடர்பு கம்பங்களும் இடையூறாக இருப்பதாக வீதி புணரமைப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்ளும் பிரதேச மக்களும் உரிய அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாகவும் நேரில் சென்று தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர் தற்போது தொலைத்தொடர்பு கம்பங்கள் சிறிதளவு அகற்றப்பட்டுள்ளன மேலும் மின் கம்பங்களை அகற்ற அதிகாரிகள் கப்பம் கோரியதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.
தகவல் – இ. தர்சன்