ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் சட்டத்திற்கு அடிப்பணிய மறுத்துள்ளரர்.

666

 

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராக மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் சட்டத்திற்கு அடிப்பணிய மறுத்துள்ளரர்.

mahinda-speech

குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன தொலைக்காட்சியில் தேர்தல் விளம்பரங்களை செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், 20 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்துவதற்காக பாரதூரமான ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்திருந்தது.

எனினும் மகிந்த ராஜபக்ச இதனை நிராகரித்துள்ளார். இதனையடுத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மகிந்த ராஜபக்சவின் மிரிஹான இல்லத்திற்கு சென்று இரண்டு சட்டத்தரணிகள் முன்னலையில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான பின்னர் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு இருக்கும் சிறப்புரிமைகள் இருக்கின்றனவா?. ஆணைக்குழு ஒன்று விசாரணைக்கு அழைத்தால் அவர் அதனை நிராகரிக்க முடியுமா?.

இந்த சட்ட ரீதியான நிலைமை தொடர்பில் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி வராவெவ விளக்கமளித்துள்ளார்.

ஆணைக்குழு சட்டத்தின் கீழ் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று ஒருவரை விசாரணைக்கு அழைத்து அவர் அதனை நிராகரித்த பின்னர், ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்த நபரிடம் செல்வது சட்டத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகும்.

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் நடக்க முடியாத நோய்களுக்கு உள்ளாகியிருந்தால் அல்லது சிறைச்சாலைகளில் இருப்பவராக இருந்தால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்துவதில் தவறில்லை.

இவ்வாறான சூழ்நிலைகள் இல்லாத நிலையில், விசாரணைக்கு வர மறுக்கும் நபரை நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்து ஆணைக்குழு முன் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு பதவியில் இருக்கும் போதே அவருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு எதிரான வோட்டர்ஸ் ஏஜ் வழக்கு இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டரநாயக்கவுக்கு எதிரான இந்த வழக்கில் அவருக்கு அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டதுடன் அவர் அதனை செலுத்தியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்புரிமைகள் உள்ளன. எனினும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றப் பின்னர் முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமையை கைவிட வேண்டும்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் உயர்நீதிமன்றத்திற்கு சென்று விளக்கத்தை பெற்றுள்ள வேண்டும் எனவும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி வராவெவ குறிப்பிட்டுள்ளார்.

SHARE