புலிகளின் குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா மெத்தனப் போக்கைப் பின்பற்றியுள்ளது – ஜீ.எல்.பீரிஸ்

304

தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மெத்தனப் போக்கைப் பின்பற்றியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திய விடயத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச படையினர் சுமார் 300,000 அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டுள்ள நிலையில், படையினர் மீது குற்றச்சாட்டுக்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு சுமத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE