எதிர்க்கட்சியின் சிலர் யாசகப் புரட்சி செய்கின்றனர் – பிரதமர்

636

எதிர்க்கட்சியின் சிலர் யாசகப் புரட்சி செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புண்ணியத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட சிலர், யாசகப் புரட்சியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆளும் கட்சி ஜனநாயகமாக நடந்து கொள்ளும் அதேவேளை, எதிர்க்கட்சி சர்வாதிகார யுக்திகளை பாராளுமன்றில் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நிதி ஒழுங்கு சட்டப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தின் போது ஏற்பட்ட காரசாரமான நிலையின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிய போது அதற்கு சந்தர்ப்பம் வழங்கியதாகவும் அந்த விவாதத்தை நடத்தாது தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் பற்றி பேசுவதற்கும் எதிர்ப்பை வெளியிடும் எதிர்க்கட்சியே தற்போது காணப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE