யாழ் மாணவி முன் ஆட்டோவில் சாகசம் சிக்கினார் சாரதி.

628

சைக்கிளில் சென்ற மாணவி முன் ஆட்டோவில் சாகசம் செய்து மாணவியை காயப்படுத்திய ஆட்டோ சாரதியொருவரை சுன்னாகம் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி நேற்று பிற்பகல் பாடசாலை முடிவடைந்ததும் வழமை போன்று சைக்கிளில் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆட்டோ சாரதி தனது ஆட்டோவால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மாணவி முன் சாகசம் செய்ததில், நிலை தடுமாறிய மாணவி சைக்கிளில் இருந்து வீழ்ந்து கைமுறிந்ததுடன் முகத்திலும் காயமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து ஆட்டோ சாரதி சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.Odo

SHARE